பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

காந்தி நகரில் பிரதமர் மோடி வாகனப் பேரணி!

பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி பற்றி...

DIN

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். தில்லியில் இருந்து தனி விமானத்தில் வதோதரா விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்ற பிரதமா் மோடி, அங்கிருந்து வதோதரா புறநகரில் உள்ள விமானப் படை நிலையம் வரை வாகனப் பேரணியில் பங்கேற்றாா்.

விமானப் படை நிலையத்திலிருந்து தாஹோத் நகருக்கு சென்ற மோடி, ரயில்வே என்ஜின் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்து பார்வையிட்டார். அகமதாபாத்-வேராவல் வந்தே பாரத் ரயில், வல்சாத்-தாஹோத் விரைவு ரயிலையும் அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தாஹோத் மற்றும் புஜ் நகரில் அடுத்தடுத்து பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு காந்திநகர் சென்றார்.

இந்த நிலையில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திா் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்ற மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

வாகனப் பேரணியில் பிரதமருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் கலந்துகொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

ஒவியம்... தீப்ஷிகா!

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

ஜம்மு, பஞ்சாபில் கடும் வெள்ளம்! தீவிர மீட்புப் பணிகளில் விமானப் படை!

காதி படத்தின் விளம்பரதார நிகழ்வு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT