இந்தியா

நாட்டில் 1,010 பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி...

DIN

நாட்டில் தற்போது 1,010 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகம் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் இன்றைய (மே 28) நிலவரப்படி நாட்டில் 1,010 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,

நாட்டில் தற்போது 1,010 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 210 பேர், தில்லியில் 104, குஜராத்தில் 83, தமிழ்நாட்டில் 69, கர்நாடகத்தில் 47 , உத்தரப் பிரதேசத்தில் 15, ராஜஸ்தானில் 13, மேற்கு வங்கத்தில் 12, ஹரியாணா, புதுச்சேரியில் தலா 9, ஆந்திரத்தில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், கோவா, தெலங்கானாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிரத்தில் 3 பேர், கர்நாடகத்தில் ஒருவர் கரோனா பாதிப்பால் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்படியிருக்கிறது இந்த சூப்பர்ஹீரோ கதை? லோகா - திரை விமர்சனம்!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வெளியேறிய சாத்விக் - சிராக்!

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

SCROLL FOR NEXT