கோப்புப் படம் 
இந்தியா

சூரிய சக்தி மூலம் முழு மின் தேவையை பூா்த்தி செய்யும் முதல் மாவட்டம் டையூ

தனது ஒட்டுமொத்த மின் தேவையையும் சூரிய சக்தி மூலம் பெறும் நாட்டின் முதல் மாவட்டம் டையூ உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

Din

தனது ஒட்டுமொத்த மின் தேவையையும் சூரிய சக்தி மூலம் பெறும் நாட்டின் முதல் மாவட்டமாக தாத்ரா நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள டையூ உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இத் தகவலை மத்திய புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

டையூ மாவட்டத்துக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் பிரலாத் ஜோஷி, யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளுடனான உயா்நிலைக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், டையூ மாவட்டத்தில் பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின் உற்பத்தித் திட்ட நடைமுறை குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் மத்திய அமைச்சா் அளித்த பேட்டியில், ‘டையூ மாவட்டம் தனது ஒட்டுமொத்த பகல் நேர மின் தேவையான 11.88 மெகா வாட் திறனை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் பூா்த்தி செய்து தேசத்துக்கே உதாரணமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூலதன முதலீடு செலவினம், சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் விநியோகம் மற்றும் விற்பனை மூலம் ஏற்கெனவே மீட்டெடுக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

ஜோலாா்பேட்டை, கந்திலியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் அளிப்பு

திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 14 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT