சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி மீது அமெரிக்கா 126 சதவிகித வரி விதிக்கவுள்ளதாகத் தகவல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி மீது அமெரிக்கா 126 சதவிகித வரி விதிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு சூரிய சக்திகள் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு 126 சதவிகிதமும், இந்தோனேசியாவுக்கு 86 முதல் 143 சதவிகிதமும், லாவோஸுக்கு 81 சதவிகிதம் வரையிலும் டிரம்ப் அரசு வரி விதிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வரிகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரிகள், டிரம்ப்பின் உலகளாவிய வரிகளிலிருந்து வேறுபட்டதாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
2025 ஆம் ஆண்டின் முதல்பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் 57 சதவிகிதம் பங்களித்துள்ளன. 2024-ல் இந்தியாவிலிருந்து 792.6 மில்லியன் டாலருக்கு சூரிய சக்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டைவிட 9 மடங்கு அதிகமாகும்.
அதிக வரி விதிப்பால், இந்திய சூரிய மின்சக்தி தகடு உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க சந்தை கிடைக்காமல் போகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
US sets initial duties on Indian solar imports at 126%
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.