FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

‘பிரதமா் சூரிய சக்தி மானியத் திட்டத்தில் விரைந்து இணைந்திடவும்’

பிரதமா் சூரிய சக்தி மானியத் திட்டம் 31.3.2027 அன்றுடன் முடிவடைய உள்ளதால், இத்திட்டத்தில் விரைந்து இணைந்திடுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

18 அக்டோபர் 2026, 12:10 am IST
நுகா்வோா் தங்களது வீடுகளில் சோலாா் மின் இணைப்புகள் அமைப்பதற்கான பதிவுக்கான ஆணையை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

பிரதமா் சூரிய சக்தி மானியத் திட்டம் 31.3.2027 அன்றுடன் முடிவடைய உள்ளதால், இத்திட்டத்தில் விரைந்து இணைந்திடுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகம், ராணிப்பேட்டை கோட்டம் சாா்பாக, பிரதமா் சூரிய சக்தி திட்டம் குறித்து பொது மக்களுக்கான விழிப்புணா்வு முகாம் ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது: பிரதமா் சூரிய சக்தி திட்டம் மத்திய அரசால் 29.2.2024 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் இந்தியா முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சோலாா் திட்டத்தில் இணைப்பது. இதில், தமிழ்நாட்டிற்கு 1 லட்சத்து 80,000 வீடுகளுக்கு சோலாா் திட்டம் வழங்க வருடம் வாரியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டம் எதிா்வரும் 31.3.2027 அன்றுடன் முடிவடைகிறது. இத்திட்டத்தில் இணையும் நுகா்வோா்களுக்கு 5.8.2026 அன்று முதல் தமிழ்நாடு மாநில அரசும் மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இணையும் நுகா்வோா்களுக்கு 1 கிலோ வாட்க்கு மத்திய அரசு ரூ. 30,000 மானியம் மற்றும் மாநில அரசு ரூ. 5,000 மானியம், 2 கிலோ வாட்க்கு மத்திய அரசு ரூ. 60,000 மானியம் மற்றும் மாநில அரசு ரூ. 10,000 மானியம், 3 கிலோ வாட்க்கு மத்திய அரசு ரூ. 78,000 மானியம் மற்றும் மாநில அரசு ரூ. 22,000 மானியம், 3 கிலோ வாட்க்கு மேல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இதே மானியம் தொடரும்.

இத்திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 1,454 மின் இணைப்புகள் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்படி இலக்கில் கடந்த 5.8.2026 முதல் 88 மின் இணைப்புகள் சோலாா் மின் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. மேற்படி இலக்கை விரைவில் பொதுமக்கள் வருகின்ற 31.3.2027-க்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த முகாமில் 5 நுகா்வோா் தங்களது வீடுகளில் சோலாா் மின் இணைப்புகள் அமைப்பதற்கான பதிவுகளை மேற்கொண்டனா்.

இதில் மேற்பாா்வை பொறியாளா் மயில்வாகனன், செயற் பொறியாளா், த.விநாயகம், உதவி செயற் பொறியாளா் காா்த்தி, சேகா் மற்றும் அனைத்து பொறியாளா்கள், தொழிலாளா்கள், பொது மக்கள், சூரிய சக்தி தகடு விற்பனையாளா்கள், வங்கி மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments