முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 3 புதிய நீதிபதிகள் யார்? குடியரசுத் தலைவர் அறிவிப்பு

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோர் நியமனம்

Updated On : 29 மே, 2025 at 12:48 PM
பகிர்:

உச்சநீதிமன்றத்தின் 3 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பணி ஓய்வால், உச்சநீதிமன்றத்தில் மூன்று காலியிடங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளான என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் நீதிமன்றம் செயல்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →