இந்தியா

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.

DIN

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,

"மேட் இன் இந்தியா' எனும் திட்டம்தான் நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திறன் நம்மிடம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிராக இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது.

முதலில் பயங்கரவாத மறைவிடங்களை அழித்தோம். பின்னர் விமானத் தளங்களை அழித்தோம். நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்திருக்கலாம். ஆனால் அதிகாரத்துடன் கட்டுப்பாடும் இருந்திருக்க வேண்டும். நாம் நிதானத்தைக் கடைப்பிடித்தோம்.

இன்று பயங்கரவாதத்தின் விளைவை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றியிருக்கிறோம். இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசுவோம். பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் சுயமரியாதையுடனும் தங்கள் சொந்த விருப்பத்துடனும் இந்தியாவில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் நம்முடையவர்கள். அவர்கள் நம் குடும்பத்தின் ஒரு பகுதியினர். பிரதமரின் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், ஒரு நாள் நிச்சயமாக சுயமரியாதையுடனும் தங்கள் சொந்த விருப்பத்துடனும் இந்தியாவுக்கு வருவார்கள். அங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடனான தொடர்பை உணர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் ஒரு சிலரே.

அன்பு, ஒற்றுமை, உண்மையின் பாதையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் விரைவில் சேரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT