சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் தம்பயா கிராமத்தைச் சேர்ந்த விவேக் தோதி (வயது 17), கோட்டே ஜோகா (45) மற்றும் பட்டே சுனில் (20) ஆகிய மூவரும் பண்டேபாரா கிராமத்தை நோக்கி இன்று (மே 30) காலை நடந்துச் சென்றுக்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நக்சல்கள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுக்கு அருகில் அவர்கள் எதிர்பாராத விதமாகச் சென்றுள்ளனர்.
அப்போது, அந்தக் குண்டு வெடித்து அவர்கள் மூன்று பேரின் முகம் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்கள் மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முன்னதாக, பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள பிஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து, நக்சல்கள் அங்குள்ள வனப்பகுதி மற்றும் மண்சாலைகளில் ஐ.ஈ.டி. வெடிகுண்டுகளை பொருத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வடகிழக்கு மாநிலங்களைக் கலங்கடிக்கும் கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.