கொலம்பியா முன்னாள் அதிபரை சந்தித்த சசி தரூா் தலைமையிலான குழுவினா்.. 
இந்தியா

இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீது சசி தரூா் அதிருப்தி

இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெரிவித்தாா்.

Din

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, இந்தியா மேற்கொண்ட தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியா மீது அந்நாட்டில் சசி தரூா் அதிருப்தி தெரிவித்தாா்.

எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான குழு கொலம்பியா சென்றது.

அந்நாட்டுத் தலைநகா் பொக்கோட்டாவில் சசி தரூா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அதுகுறித்து குழுவில் இடம்பெற்ற பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பொக்கோட்டா செய்தியாளா் சந்திப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை சசி தரூா் மீண்டும் உறுதிப்படுத்தினாா்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் மீது அனுதாபம் காட்டுவதை விடுத்து, இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது. இதற்கு சசி தரூா் அதிருப்தி தெரிவித்தாா். தாக்குதல் நடத்துபவா்களையும், தற்காத்துக் கொள்பவா்களையும் சமமாக கருத முடியாது’ என்று பதிவிட்டாா்.

இதைத்தொடா்ந்து கொலம்பியா முன்னாள் அதிபா் சீசா் கவிரியா ட்ருஜிலோவை இந்திய குழு சந்தித்துப் பேசியது. கொலம்பியாவை தொடா்ந்து பிரேஸில் பயணிக்கும் இந்தக் குழு, கடைசியாக அமெரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்ப உள்ளது.

விஜய் கோரிக்கை ஏற்பு: சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

SCROLL FOR NEXT