விபத்தில் சேதமடைந்த கட்டடம்.  
இந்தியா

பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி, 27 பேர் காயம்

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

DIN

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் மற்றும் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உ.பி: அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பிரசவம்! விசாரணைக் குழு அமைப்பு!

விபத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட சுமார் 40 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்தனர். அவர்கள் பட்டாசு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு ஷிப்டை முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த வெடிப்பு ஏற்பட்டு பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டதாக தொழிலாளி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து அதிகாரி கூறுகையில், தொழிற்சாலை உரிமம் பெற்றதாகவும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து விலகி விவசாய நிலங்களில் அமைந்துள்ளது. இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். வெடி விபத்து காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் பலி!

SCROLL FOR NEXT