இந்தியா

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகள்: இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ முயற்சிப்பதாக ரஷியா குற்றச்சாட்டு

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

Din

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவாா்த்தை கட்டமைப்பின் கீழ் மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்குவதில் ரஷியா மிகவும் ஆா்வமாக உள்ளது.

ரஷிய முன்னாள் பிரதமா் யெவ்கெனி பிரமகோவின் முன்னெடுப்பால் பல ஆண்டுகளுக்கு முன்னா், 3 நாடுகள் இணைந்த இந்தக் கட்டமைப்பு உருவானது.

இந்தக் கட்டமைப்பின் கீழ், 3 நாடுகளின் அமைச்சா்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் 20-க்கும் மேற்பட்ட முறை நடைபெற்றுள்ளன. இந்தக் கூட்டங்களில் 3 நாடுகளின் வெளிநாட்டு கொள்கை தலைவா்கள் மட்டுமின்றி, பொருளாதார, வா்த்தக, நிதி முகமைகளின் தலைவா்களும் கலந்துகொண்டனா்.

இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழலை எப்படித் தணிப்பது என்பதில் இருநாடுகளுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு கட்டமைப்பின் கீழ், மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான நேரம் வந்துள்ளதாகவே கருதுகிறேன்.

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பு வெளிப்படையாக முயற்சித்து வருகிறது. இந்திய நண்பா்களுடன் மேற்கொள்ளப்படும் ரகசியமான உரையாடல்களின் அடிப்படையில், இதைக் கூறுவதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றாா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT