கோப்புப்படம்.  
இந்தியா

கரோனா அறிகுறி- பள்ளி குழந்தைகளுக்கு கர்நாடக அரசு முக்கிய அறிவுறுத்தல்

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

DIN

கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கா்நாடகத்தில் நிலவும் கரோனா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்த அறிவுறுத்தலைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

அதில், கரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் காய்ச்சல், இருமலுடன் பள்ளி வந்தால் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும்.

மேலும் பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தின் நலனுக்காக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மாநிலத்தில் 234 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. பட்ஜெட்: சுகாதாரத் துறைக்கு ரூ. 37,956 கோடி ஒதுக்கீடு!

டி20 உலகக் கோப்பை: நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐக்கிய அரபு அமீரக வீரர்!

போராட்டக்காரர்கள் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்!

ஃபிரிட்ஜ் வைக்கும் இடம் முக்கியம்! வாஸ்து இல்லை.. பாதுகாப்பு!

“பிரதமர் வரும்போது தெரியும்” தேமுதிக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT