பெங்களூருவில் போக்குவரத்து சிக்னலில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தம்பதி பலியாகினர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவின் சாந்தி நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள கே.எச் சந்திப்பில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் போக்குவரத்து சிக்னலில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் தம்பதியினர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர். விபத்திற்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
சம்பவம் நடந்தபோது உள்ளே நோயாளி யாரும் இல்லை எனக் கூறி, கோபமடைந்த மக்கள் ஆம்புலன்ஸை தள்ளிவிட்டு கவிழ்த்தியதாக போலீஸார் தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நேரில் கண்ட சாட்சிகள் கூறுகையில், வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனங்களில் ஒன்றை சில மீட்டர்கள் இழுத்துச் சென்று, அருகிலுள்ள சிக்னல் கம்பத்தில் மோதி பின்னர் நின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.