இந்தியா

ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மூத்த பெண் நக்ஸல் சரண்!

மத்திய பிரதேசத்தில் காவல் துறையிடம் மூத்த பெண் நக்ஸல் சரணடைந்தாா். அவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் சரணடைந்துள்ளாா்.

Chennai

மத்திய பிரதேசத்தில் காவல் துறையிடம் மூத்த பெண் நக்ஸல் சரணடைந்தாா். அவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் சரணடைந்துள்ளாா்.

தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவா் சுனிதா. மூத்த பெண் நக்ஸலான அவா் குறித்து தகவலளிப்பவருக்கு ரூ.14 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சத்தீஸ்கா், மகாராஷ்டிரம் மற்றும் மத்திய பிரதேச காவல் துறை கூட்டாக அறிவித்திருந்தன.

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் வட்டத்தைச் சோ்ந்த அவா், மத்திய பிரதேசத்தின் பாலகாட் பகுதியில் காவல் துறையின் நக்ஸல் ஒழிப்பு சிறப்புப் பிரிவிடம் சனிக்கிழமை சரணடைந்தாா் என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், ‘நக்ஸல்கள் சரணடைய வேண்டும். அதைச் செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எச்சரிக்கை விடுத்தாா். அதன் விளைவாக சுனிதா சரணடைந்துள்ளாா். கடந்த 1992-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வேறு மாநிலத்தைச் சோ்ந்த நக்ஸல் ஒருவா் மத்திய பிரதேச அரசிடம் சரணடைவது இதுவே முதல்முறை.

கடந்த 10 மாதங்களில் மாநிலத்தில் பல நக்ஸல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் குறித்து தகவல் அளித்தால், மொத்தம் ரூ.1.46 கோடி வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது’ என்று தெரிவித்தாா்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

SCROLL FOR NEXT