கர்நாடக மாநிலத்தில், இன்று (நவ. 4) காலை, 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில், இன்று காலை 7.49 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், லேசான அதிர்வுகள் மட்டுமே உணரப்பட்டதாகவும்; இதனால், எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 50 முதல் 60 கி.மீ. சுற்றளவில் மட்டுமே அதன் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த சில வாரங்களாக விஜயபுரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் ஏற்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.