பிகாரில் காட்டாட்சிக்கு எதிராக வாக்களிக்க பெண்கள் உறுதியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக சார்பாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவும் பிரதமர் மோடி இன்று பெண் உறுப்பினர்கள் முன்பாக உரையாற்றினார்.
பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிச் சாதனையை மேலும் முறியடிக்க பிகார் மக்கள் உறுதியேற்றுள்ளனர். அதே வேளையில், காட்டாட்சியை விரும்புபவர்கள் மோசமான தோல்வியைப் பெறுவர். பிகாரில் பாஜகவின் பெண் உறுப்பினர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். எனவே வெற்றி குறித்து எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை.
பிகாரில் மின்சாரச் செலவுகள் குறைந்துள்ளன. இதனால், மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். மேலும், பிகாரின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை இயக்கவும் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
காட்டாட்சி காலத்தில் பெண்கள் வெளியில் செல்வது என்பது கடினமாக இருந்தது. ஆனால். இப்போது அப்படியில்லை.
இன்றும் கூட, நம் மகள்களும் சகோதரிகளும் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பல இடங்களில் இரவில் அச்சமின்றி வேலை செய்கிறார்கள். நல்ல நிர்வாகம் மற்றும் சட்டம் - ஒழுங்கு இருக்கும்போது, பெண்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அவர்கள்தான் காட்டாட்சிக்கு எதிரான ஒரு சுவராக இருந்து வருகின்றனர். அதனால்தான், பெண்களுக்கு எதிரான பொய்களைச் சொல்வதில் காட்டாட்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், காட்டாட்சி மீண்டும் வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று நமது பெண்கள் உறுதியாகத் தீர்மானித்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.