பிகாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியதைத் தடுக்க பாஜகவின் தாமரை சின்னத்துக்கு உங்களின் வாக்குகளை அழுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகாரில் 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நவம்பர் 6ல் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 11-ம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தர்பங்கா, மோதிஹாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசியதாவது,
பிகாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பொத்தானை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோஷி நதி நீலை நீர்ப்பாசனத்திற்காகவும், வெள்ளத்தைத் தடுக்கவும் அரசு ரூ. 26 ஆயிரம் கோடி செலவிடும் என்று உறுதியளித்தார்.
நவம்பர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் நீங்கள் தவறு செய்தால் பிகாரில் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை மீண்டும் வழக்கமாகிவிடும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாரை முழுமையான வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும்.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், மிதிலா, கோஷி, திருஹட்டைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக பாட்னா அல்லது தில்லிக்குச் செல்ல வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் எய்ம்ஸ்-தர்பங்காவில் தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
3.60 கோடி மக்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு பெறுகிறார்கள். அதே நேரத்தில் தர்பங்காவில் உள்ள ஐடி பூங்கா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
பிகாரில் சாத் விழாவை அவமதித்தவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி பிகார் தேர்தலில் அழிக்கப்படுவார்கள்.
மாநிலத்தில் என்டிஏ ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பொறியியல், ஒரு மருத்துவக் கல்லூரி கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார். இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.