தாய்லாந்தில் இருந்து 270 இந்தியர்கள் இந்திய விமானப் படையின் விமானங்கள் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
இந்திய விமானப் படையின் விமானங்கள் மூலம் தாய்லாந்தில் இருந்து 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் நாடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் கூறுகையில், நாடு திரும்பிய இந்தியர்கள் மியான்மர் நாட்டின் வழியாக சட்டவிரோதமான முறையில் தாய்லாந்திற்குள் நுழைந்ததாகவும், அங்குள்ள சைபர் மோசடி நிறுவனங்களில் அவர்கள் வேலைச் செய்து வந்ததாகவும், கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்தின் குடியேற்ற விதிமுறைகளை மீறியதற்காக அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், பாங்காக் மற்றும் சியாங் மாய் மாகாணங்களில் உள்ள இந்தியத் தூதர்கங்களின் முயற்சியால் அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
முன்னதாக, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள், கட்டாயப்படுத்தப்பட்டு சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 53.77%: அதிகபட்சமாக கோபால்கஞ்சில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.