நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் செவெல்லா தொகுதியின் பாஜக எம்.பி.யான கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, செய்தியாளர்களுடன் பேசுகையில் ``நல்ல சாலைகளால்தான் அதிகமான பெரிய விபத்துகளுக்குக் காரணமாகின்றன.
ஏனெனில், நல்ல சாலைகளில் வாகனங்கள் வேகமாகச் சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
ஆனால், மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன. மெதுவாகச் செல்வதால், விபத்துகளும் குறைவாகவே நிகழ்கின்றன’’ என்று தெரிவித்தார்.
மேலும், முந்தைய பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட நல்ல சாலைகள்தான் விபத்துகளுக்குக் காரணம் என்று கூறினார்.
தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலியான நிலையில், நல்ல சாலைகள்தான் காரணம் என்று விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க: அவர்கள்மேல் புல்டோசரை ஏற்றி.. பிகார் துணை முதல்வர் கொலை மிரட்டல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.