பிகாரில் வாக்குப்பதிவு IANS
இந்தியா

பிகார் தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு!

பிகார் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று(வியாழக்கிழமை) வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணியாகக் குறைக்கப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிகாரில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நவ. 11 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. நவ. 14 முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... ஜூஹி ஜெயகுமார்!

கும்கி 2 - டிரைலர் வெளியீடு!

அன்பே... பெரோஷா கான்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து, தயவுசெய்து உதவுங்கள்; பாடகி சின்மயி புகார்!

சென்னை > தோஹா > ரியாத் > குவைத் > துபை > சென்னை... கல்யாணி பிரியதர்சன்!

SCROLL FOR NEXT