தன்னைத் தாக்கியவர்கள் மேலே புல்டோசரை ஏற்றுவேன் என்று பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் பேரவைத் தேர்தலுக்கு மத்தியில், கோரியாரி கிராமத்துக்குச் சென்ற மாநில துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா மீது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், தன்னைத் தாக்கியவர்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய்குமார் சின்ஹா கூறியுள்ளார்.
செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வருவதையும், புல்டோசர் நடவடிக்கையையும் கண்டு ஆர்ஜேடி அஞ்சுகிறது. அதனால்தான், என்னை கிராமத்தினுள் அனுமதிக்கவிலை. தாக்குதல் நடத்தியவர்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களின் நிலைப்பாட்டைக் காட்டி விட்டனர். அதிகாரம் இல்லாதபோதே அவர்களின் நடத்தை இப்படியென்றால், தேர்தலி வெற்றிபெற்றால், காட்டாட்சியைவிட மோசமானதாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
தனது தொகுதியான கோரியாரி கிராமத்துக்கு சென்றபோது, விஜய்குமார் சின்ஹாவை ஊருக்குள் விடாமல் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், மாட்டுச் சாணம், கற்கள், காலணிகளை விஜய் குமார் சென்ற காரின் மீது வீசியதுடன், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான், புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய்குமார் சின்ஹா கூறியிருப்பது கொலை மிரட்டல் என்று சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: ஊடுருவல்காரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.