ஊடுருவல்காரர்களை இந்திய குடிமக்களாக மாற்ற ஆர்ஜேடி, காங்கிரஸ் முயற்சி செய்துவருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் 121 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹராரியாவில் பிரதமர் மோடி பேசியதாவது,
பிகாரில் ஒரு காலத்தில் சமூக நீதி நிலமாக இருந்ததாகவும், 1990களில் ஆர்ஜேடியின் காட்டாட்சி மூலம் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், தற்போதைய பிகார் ஆட்சியால் அது மாறியுள்ளது. காட்டாட்சியிலிருந்து முதல்வர் நிதிஷ் குமார் மீட்டெடுத்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு பிகார் மாநில விவசாயிகளுக்கு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆர்ஜேடி ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்றும் நிதிஷ் குமார் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
2014 இல் இரட்டை இயந்திர அரசு அமைக்கப்பட்ட பிறகு பிகாரின் வளர்ச்சியில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் ஐஐடி திறக்கப்பட்டுள்ளது. புத்த கயாவில் ஐஐஎம், பாட்னாவில் எய்ம்ஸ் திறக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் தர்பங்காவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிகாரில் ஒரு தேசிய சட்ட பல்கலைக்கழகமும் உள்ளது, பாகல்பூரில் ஐஐஐடியும் உள்ளது, மேலும் பீகாரில் 4 மத்திய பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
மாநிலம் முழுவதும் ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு அவர்களை அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் சவாலைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். ஊடுருவல்காரர்களை இந்திய குடிமக்களாக மாற்ற ஆர்ஜேடி, காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ஊடுருவல்காரர்களுக்காக எதிர்க்கட்சிகள் பல்வேறு பேரணிகளை நடத்துகிறது. ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற அனைத்து வகையான பொய்களையும் பரப்புகிறார்கள், மேலும் மக்களைத் தவறாக வழிநடத்த அரசியல் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.
பிகாரில் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பிகார் துணை முதல்வர் சென்ற கார் மீது தாக்குதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.