பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது Photo : X / CEO, Bihar
இந்தியா

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பிகார் சட்டப்பேரவை முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்டத் தோ்தலில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.75 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தம் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

காலை 7 மணிமுதலே வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

மோதும் தே.ஜ.-இண்டி கூட்டணிகள்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.

மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக நவ.11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Voting for the first phase of Bihar elections has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி?

பொய்யான வாக்குறுதிகளால் சிக்கித் தவிக்கும் பிகார்: ஜெய்ராம் ரமேஷ்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது: அப்பாவு குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் இடம்பெற... எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது எப்படி?

SCROLL FOR NEXT