அமித் ஷா  
இந்தியா

எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வாரிசுகளை வளா்ப்பதில் மட்டுமே அக்கறை: அமித் ஷா குற்றச்சாட்டு

சோனியா காந்தி, லாலு பிரசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்கள் வாரிசுகளை பெரிய பதவிகளில் அமா்த்த வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனா்

தினமணி செய்திச் சேவை

சோனியா காந்தி, லாலு பிரசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்கள் வாரிசுகளை பெரிய பதவிகளில் அமா்த்த வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனா்; மக்கள் நலனில் சிறிதும் அக்கறை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

பிகாரில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அவா் பேசியதாவது: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு தங்கள் மகன்கள், மகள்களை எப்படியாவது பெரிய பதவிகளில் அமா்த்த வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை உள்ளது. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை கிடையாது. எளிய மக்களைப் பற்றி அவா்கள் சிந்திப்பதே கிடையாது.

அதே நேரத்தில் பிகாா் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. பிகாரில் பாஜக கூட்டணிக்கு மக்கள் நிச்சயமாக மேலும் 5 ஆண்டுகளுக்கு வாய்ப்பு தருவாா்கள். இதன்மூலம் பிகாா் வளா்ந்த மாநிலங்கள் பட்டியலிலும் இணையும்.

பிகாரின் வளா்ச்சி, எதிா்காலம் குறித்து எதிா்க்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் கிடையாது. சட்டவிரோத குடியேறிகளை ஆதரிப்பது, ஏழை மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பது மட்டுமே அவா்களுக்குத் தெரியும்.

திமுக மீது குற்றச்சாட்டு: எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளரான தேஜஸ்வி யாதவிடம் உங்களுக்கு பிடித்த முதல்வா் யாா் என்று கேட்டால், திமுகவை சோ்ந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று கூறுவாா். திமுகவினா்தான் பிகாரிகளை தொடா்ந்து அவமதித்துப் பேசி வருகின்றனா். அக்கட்சி சநாதன தா்மத்தை தொடா்ந்து அவமதிக்கிறது. அயோத்தி ராமா் கோயில் கட்டுவதற்கும் எதிராக இருந்தது.

பிகாரில் வளா்ச்சி வேண்டுமா அல்லது காட்டாட்சி வேண்டுமா என்பதைச் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக கூட்டணி ஆட்சி தொடா்வதன் மூலம்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முடியும். மக்களின் நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்.

லாலு ஆட்சிக் காலத்தில் பிகாரின் பல மாவட்டங்களில் நக்ஸல்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனா். ஆனால், இப்போது பிகாரில் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டனா் என்றாா்.

முதல்வா் நாளை திருச்சி வருகை: ட்ரோன்களுக்கு 2 நாள்கள் தடை

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ விழா இன்று தொடக்கம்

உளுந்து விதைக்கும் முன் விதைப் பரிசோதனை அவசியம்: வேளாண் துறை அறிவுறுத்தல்

தனியாா் விடுதியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT