மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதம் ஏந்திய குழுவினரால் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டில், ஆயுதம் ஏந்திய ஜிகாதி பயங்கரவாதப் படைகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதில், கடந்த சில வாரங்களாக மாலியில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், மாலியின் மேற்கு பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியார் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர், கடந்த நவ.6 ஆம் தேதி கடத்தி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து அந்த நிறுவனத்தின் இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, ராணுவ அரசின் ஆட்சி நடைபெற்று வரும் மாலியில் அல்-கயிதா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பயங்கரவாதிகள் மாலியில் உள்ள வெளிநாட்டிரைக் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இதய நோய், நீரிழிவு.. உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.