ரீல்ஸ் விடியோ எடுத்த ஜஸ்னா சலீம் 
இந்தியா

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

குருவாயூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த கலைஞர் மீது வழக்குப் பதிவு..

இணையதளச் செய்திப் பிரிவு

குருவாயூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாபர் குருவாயூர் கோயிலில் உள்ள புனித குளத்தில் காலைகளை நனைப்பது போன்று ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நிலையில், புனிதத் தலங்களில் ரீல்ஸ் விடியோவுக்கு கேரள உயர்நீமின்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு இந்துக்கள் அல்லாதோர் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் குருவாயூர் கோயிலில் ரீஸ்ஸ் விடியோ எடுத்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்ணா சலீம் இவர் கிருஷ்ணர் குறித்த ஓவியங்களை வரைந்து இன்ஸ்டாவில் வெளியிடும் பிரபல கலைஞர். குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து ஜஸ்னா சலீம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கிருஷ்ணரின் தீவிர பக்தையான ஜஸ்னா சலீம், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திருச்சூர் வருகையின்போது, கிருஷ்ணரின் ஓவியத்தை வரைந்து அவருக்குப் பரிசாக வழங்கினார்.

இதற்கு முன்னதாக, குருவாயூர் கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் உள்ள காணிக்கைப் பெட்டியின் மேலே வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலையை மாலையால் அலங்கரித்ததை விடியோ படம் எடுத்ததாகக் கூறி இந்தாண்டு தொடக்கத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோயில் வளாகத்திற்குள் ரீல்ஸ் விடியோக்களை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது கூடாது என்று சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை அவர் மீறி இந்த ரீல்ஸ் விடியோவை எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக குருவாயூர் கோயில் வளாகத்திற்கு அருகில் கேக் வெட்டி அதன் விடியோவை படம்பிடிக்க முயன்றபோது ஜஸ்னா சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jasna Salim, an artist known for her Lord Krishna paintings, has been booked again for allegedly violating the ban on filming videos on Guruvayoor Sree Krishna temple premises, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேஎச் - 237! மலையாளக் கலைஞர்களைக் களமிறக்கிய கமல்!

தமிழகத்துக்கு 4 முதல்வர்கள்! இபிஎஸ் கடும் தாக்கு!

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம்

கடைசி ஒருநாள்: டி காக் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 144 ரன்கள் இலக்கு!

இருளில் தெரிய ஒளியாய் இரு... மிஷா நரங்!

SCROLL FOR NEXT