பிகார் சட்டப்பேரவைக்கான 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று (நவ. 9) மாலையுடன் நிறைவு பெற்றது.
இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவ. 11-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் நவ. 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.
முதல் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகின. முதல்கட்டத் தேர்தலில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்பட 1,314 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இதையும் படிக்க | வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர்: ராகுல் குற்றச்சாட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.