கோப்புப்படம் ENS
இந்தியா

கேரளத்தில் டிச. 9, 11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்!

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9 ஆம் தேதியும் திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குறிப்பிட்ட 2 நாள்களிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறும்.

நவம்பர் 21 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், வேட்புமனு மீதான பரிசீலனை நவ. 22 ஆம் தேதி நடைபெறும், நவ. 24 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 17,337 வார்டுகள், தொகுதி பஞ்சாயத்துகளில் 2,267 வார்டுகள், 346 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 3,205 நகராட்சி வார்டுகள் மற்றும் 421 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Kerala local body elections 2025 to be held in two phases on December 9 and 11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாவுக்கான காத்திருப்பில்... துல்கர் சல்மான்!

பகிர மறந்த விழாக்காலப் படங்கள்... சந்தீபா தர்!

ருசி, சூரியன், கடல், மறுபடியும்... பிரதிகா சூட்!

அறிவுக்கரசி... காயத்ரி யுவராஜ்!

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!

SCROLL FOR NEXT