பிகாரில் 2ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பெரும்பாலும் அல்ல அனைத்து கருத்துக் கணிப்புகளுமே ஒன்றுபோல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பது போல எண்ணிக்கையை வெளியிட்டுள்ளன.
எனினும், இவை எதுவும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்காது என்பதே, இதுவரை பார்க்கப்பட்ட வரலாறாக உள்ளது. உண்மையில் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நவ.14ஆம் தேதி பொறுத்திருந்து பார்க்கலாம்.
மொத்தம் 243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு முதல்கட்டமாக நவ.6-ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. 2வது மற்றும் இறுதிக்கட்டமாக, 20 மாவட்டங்களை உள்ளடக்கிய 122 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பிகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பிகாரில் மீண்டும் நிதீஷ் குமார் ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது தேஜஸ்வி யாதவ் முதல்வராவாரா? என்பது குறித்த தேர்தல் கணிப்புகள் வெளியாகவிருக்கின்றன.
பெண்கள் அதிக வாக்களிப்பு
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அதிகளவில் பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். காலை முதலே வாக்குச்சாவடிகளில் பெண்கள் வரிசை நீண்டு காணப்பட்டது.
அதி வாக்குகள் பதிவானதால், எனது மனம் மகிழ்ச்சியில் ததும்புகிறது என்று தேஜஸ்வி யாதவ் பதிவிட்டுள்ளார்.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 142 முதல் 145 (144 இடங்கள்) தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது.
இந்தியா கூட்டணிக்கு 88 - 95 (95 தொகுதிகள்) இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது.
ஜன் சுராஜ் உள்பட மற்றவை 6 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் இன்ஸைட் கருத்துக் கணிப்பு
பிகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியே பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பீப்பிள்ஸ் இன்ஸைட் கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.
அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 133 - 148 தொகுதிகளில் வெற்றி பெறும்.
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பு
மேட்ரிஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே ஆதரவாக அமைந்துள்ளது.
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 147 - 167 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள் பல்ஸ் கருத்துக் கணிப்பு
பீப்பிள் பல்ஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 133 - 159 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபீ கருத்துக் கணிப்பு
147 - 167 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏபிபீ கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு
தைனிக் பாஸ்கர் வெளியிட்ட பிகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 145 - 160 இடங்களிலும் மகாகத்பந்தன் கூட்டணி 73 - 91 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேவிசி வெளியிட்ட கருத்துக் கணிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி 135 - 150 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 88 - 103 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க.. பிகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று! கடந்த கால கணிப்புகள் - முடிவுகள் ஒப்பீடு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.