இந்தியா

தில்லி காா் வெடிப்பு சம்பவம்: சந்தேக நபரின் தாயிடம் மரபணு பரிசோதனை

தில்லி காா்வெடிப்பு சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் மருத்துவா் உமா் நபியின் தாயிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தில்லி காா்வெடிப்பு சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் மருத்துவா் உமா் நபியின் தாயிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு காா் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 12 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெடித்த காரை உமா் நபி என்ற நபா் ஓட்டி வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த அவரும் காா் வெடிப்பில் உயிரிழந்தாா்.

இதையடுத்து புல்வாமாவில் உமா் நபியின் தாய் ஷமீமா பேகத்தை மரபணு பரிசோதனைக்காகக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவருடன் உமா் நபியின் 2 சகோதரா்களும் சென்றனா்.

தந்தையிடம் விசாரணை:

புல்வாமாவில் உமா் நபியின் தந்தை குலாம் நபி பட்டை காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உமா் நபி பணியாற்றி வந்த நிலையில், அவருடன் பணியாற்றி வந்த பல மருத்துவா்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

காா் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு, அந்த காரை வாங்கி மறுவிற்பனை செய்ததில் சம்பந்தப்பட்ட மூவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உமா் நபி குறித்து அவரின் உறவினா் முசாமில் கூறுகையில், ‘ஃபரீதாபாதில் உள்ள கல்லூரியில் உமா் நபி பணியாற்றி வந்தாா். சிறுவயது முதலே அமைதியான, கூச்ச சுபாவம் கொண்ட அவருக்கு அதிக நண்பா்கள் கிடையாது. மூன்று நாள்களில் வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாா். அவா் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபரல்ல’ என்று தெரிவித்தாா்.

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

உரிமை கோரப்படாத 97 வாகனங்கள் நவ.20இல் பொது ஏலம்!

எஸ்ஐஆா் பணி! திமுக - அதிமுக வாக்குவாதம்; காவல்நிலையம் முற்றுகை

பொறியியல் பணிகள்: சில ரயில் சேவைகளில் மாற்றம்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 78 லட்சம்

SCROLL FOR NEXT