தில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு, கனடா அரசு இரங்கல் தெரிவிப்பதாக இந்தியாவில் உள்ள கனடா உயர் ஆணையம் அறிவித்துள்ளது.
தில்லியில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று (நவ. 10) இரவு கார் வெடித்ததில் 12 பேர் பலியாகினர். மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம், தீவிரவாதச் சதிச் செயலா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தில்லியில் கார் வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு கனடா அரசு இரங்கல் தெரிவிப்பதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், இந்தியாவில் உள்ள கனடா உயர் ஆணையத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற, மற்றொரு எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களையும் கனடா உயர் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.