பெரும் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் 
இந்தியா

2014 தொடக்கம் இதுவரையிலான பெரும் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள்!

2014 முதல் இதுவரையிலான பெரும் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 11 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 24 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கார் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது பயங்கரவாதிகளின் நாச வேலையா? என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இருப்பினும், வெடித்துச் சிதறிய ஹுண்டாய் ஐ-20 காரை ஓட்டியவர் மருத்துவராக பணிபுரிந்த முகமது உமர் என்றும், அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய் கொண்டு வெடிவிபத்தை நடத்தியதாகவும் குற்றப்புலனாய்வு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நாட்டில் 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல் நடந்த இடம், பலி விவரங்கள்...

  1. டிச. 28, 2014 - பெங்களூரு வெடிகுண்டு தாக்குதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம் - தேவாலயத்தில் ஐஇடி தாக்குதல்

  2. மார்ச் 20, 2015 - ஜம்மு பள்ளியில் பயங்கரவாத தாக்குதல் - 6 பேர் பலி, 10 பேர் காயம்

  3. ஜூலை 27, 2015 - குருதாஸ்பூர் பயங்கரவாத தாக்குதல் - 10 பேர் பலி, 15 பேர் காயம் - காவல்துறை சோதனைச் சாவடி மீது துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல்

  4. ஜன. 2, 2016 - பதான்கோட் விமானப் படைத் தள தாக்குதல் - 7 பேர் பலி - ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தாக்குதல்

  5. ஜூன் 25, 2016 - பாம்பூர் தாக்குதல் - 8 பேர் பலி, 22 பேர் காயம் - சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீதான தாக்குதல்

  6. செப். 18, 2016 - உரி ராணுவ முகாம் தாக்குதல் - 23 பேர் பலி - ராணுவ முகாமுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த வீரர்கள் மீதான ஜெய்ஷ் பயங்கரவாதிகளின் தாக்குதல்

  7. அக். 3 2016 - பாரமுல்லா தாக்குதல் - சர்வதேச எல்லையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் தாக்குதல்

  8. அக். 6, 2016 - ஹந்த்வாரா ராணுவ தளத் தாக்குதல் - பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை

  9. நவ. 29, 2016 - நக்ரோட்டா ராணுவத் தளத் தாக்குதல் - 10 பேர் பலி - ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்

  10. ஏப். 24, 2017 - சுக்மா மாவோயிஸ்ட் தாக்குதல் - 26 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

  11. மார்ச் 7, 2017 - போபால்-உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பு - 10 பேர் பலி

  12. ஜூலை 11, 2017 - அமர்நாத் யாத்திரை படுகொலை - 8 பேர் பலி - லஷ்கர் பயங்கரவாதிகளின் தாக்குதல்

  13. பிப். 10, 2018 - சுஞ்சுவான் ராணுவத் தளத் தாக்குதல் - 11 பேர் பலி

  14. மார்ச் 13, 2018 - சுக்மா ஐஇடி குண்டுவெடிப்பு - 9 பேர் பலி - சாலையோரம் வெடிகுண்டு வைத்து நக்ஸல் தாக்குதல்

  15. பிப். 14, 2019 - புல்வாமா தற்கொலைப் படைத் தாக்குதல் - 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி - சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகன அணிவகுப்பு மீது ஜெய்ஷ் அமைப்பு தாக்குதல்

  16. மார்ச் 7, 2019 - ஜம்மு பேருந்து நிலைய கையெறிக் குண்டு தாக்குதல் - 3 பேர் பலி, 30+ காயம்

  17. ஏப். 9, 2019 - தண்டேவாடா தாக்குதல் - 5 பேர் பலி - மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்

  18. மே 1, 2019 - கட்சிரோலி வெடிகுண்டு தாக்குதல் - 16 பேர் பலி - பேருந்தில் ஐஇடி தாக்குதல்

  19. ஜூன். 12, 2019 - அனந்த்நாக் தாக்குதல் - 5 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

  20. ஏப். 3, 2021 - சுக்மா - பிஜாப்பூர் மோதல் - 22 ராணுவ வீரர்கள் பலி - மாவோயிஸ்ட் குழுத் தாக்குதல்

  21. ஜூன் 27, 2021 - ஜம்மு ட்ரோன் தாக்குதல் - இந்திய விமானப் படை தளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்

  22. ஆக. 27, 2021 - திமா ஹசாவோ, அஸ்ஸாம் குண்டுவெடிப்பு - தண்டவாளத்தில் ஐஇடி வெடிகுண்டு வைத்து அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி தாக்குதல்

  23. ஜன. 1, 2, 2023 - ரஜௌரி தாக்குதல்கள் - 7 பேர் பலி - லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல்

  24. ஏப். 8, 2023 - எலத்தூர் ரயில் தீவைப்பு - 3 பேர் பலி

  25. ஏப். 26, 2023 - தண்டேவாடா குண்டுவெடிப்பு - 10 காவலர்கள் உள்பட 11 பேர் பலி - நக்ஸலின் ஐஇடி வெடிகுண்டு தாக்குதல்

  26. அக். 29, 2023 - கொச்சி கிறிஸ்துவ கூட்ட அரங்கம் தாக்குதல் - 3 பேர் பலி, 36 பேர் காயம் - வெறுப்பு பேச்சுக்காக தாக்குதல் நடத்தியதாக டோமினிக் மார்ட்டின் என்பவர் சரண்

  27. மார்ச் 1, 2024 - பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு - 9 பேர் காயம் - ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்

  28. ஜூன் 9, 2024 - ரியாசி பேருந்து தாக்குதல் - 9 பேர் பலி, 41 பேர் காயம் - யாத்திரை சென்றவர்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல்

  29. அக். 20, 2024 - ககாங்கீர் தாக்குதல் - ஒரு மருத்துவர் உள்பட 7 பேர் பலி

  30. மார்ச் 28, 2025 - கதுவா பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 காவலர்கள் பலி

  31. ஏப். 22, 2025 - பஹல்காம் தாக்குதல் - 26 பேர் பலி - சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல்

  32. நவ. 10, 2025 - தில்லி செங்கோட்டை கார் வெடிப்பு - 12* பேர் பலி, 30 பேர் காயம்

  33. 2015 முதல் 2025 வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்டுகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் பலி

Major attacks and bombings since 2014!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ள ஸ்ரேயா..! புஷ்பா சமந்தாவை விஞ்சுவாரா?

தில்லி கார் வெடிப்புக்கு ஆதரவு? சமூக வலைதளங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவெற்றி? பிகார் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

SCROLL FOR NEXT