தில்லி கார் வெடிப்பு தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று(திங்கள்கிழமை) இரவு 7 மணி அளவில் வெள்ளை நிற ஹூண்டாய் கார், முதலில் மெதுவாக சென்ற நிலையில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிஆர்பிஎப், மத்திய புலனாய்வு அமைப்புகளும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்திருந்தன.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. தில்லி காவல்துறை, உளவுத் துறை என அனைத்து பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இன்று காலையும் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிற்பகலில் இந்த கூட்டத்திற்குப் பின்னரே வழக்கின் விசாரணையை முழுமையாக என்ஐஏ-விடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படியே உடனடியாக என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.