தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இனி இதுபோன்ற செயல்களைச் செய்ய பயம் வர வேண்டும் என்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
தில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து பேசிய கார்கே,
"குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அதற்கேற்ப தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எவருக்கும் எந்தவிதமான கருணையும் காட்டப்படக் கூடாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களைச் செய்ய இனி பயப்பட வேண்டும். கடுமையான தண்டனை மூலமாக பயம் வர வேண்டும்.
தேசிய தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசிடம் உளவுத் துறை, சிபிஐ உள்ளிட்ட பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. இந்த அனைத்து அமைப்புகளும் இருந்தாலும் பாதுகாப்பில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.
தில்லி குண்டுவெடிப்பு குறித்து முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நாங்கள் இதுபற்றி மேலும் பேசுவோம். டிசம்பர் 1 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். அதுகுறித்து விவாதிப்போம்" என்றார்.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.