ஏழைகளை ஒடுக்குவது மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் பழக்கம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
விபி ஜி ராம் ஜி-க்கு எதிரான விவசாயிகள் மாநாட்டில் கார்கே பேசுகையில், "வாக்குகளைப் பெறுவதற்காக, தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர் என்று அவர் (பிரதமர் மோடி) தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால், அவர் எப்போதாவது தேநீர் தயாரித்திருக்கிறாரா? எப்போதாவது மக்களுக்கு தேநீர் வழங்க தேநீர் குடுவையுடன் சுற்றியிருக்கிறாரா? இதெல்லாம் வெறும் நாடகம்; ஏழைகளை ஒடுக்குவதே அவரது பழக்கம்.
முன்னாள் பிரதமர் நேருவுக்கு கிடைத்த பெரிய திட்டங்களைப் போல, அவர்கள் (பாஜக) செய்த ஏதேனும் ஒரு வேலையைச் சொல்லுங்கள்" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்ததாகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள் என்றும் காங்கிரஸார் மீது பாஜக தொடர்ந்து விமர்சித்து வரும்நிலையில், பிரதமர் மோடி மீது கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.