தில்லி கார் வெடிப்பு -
இந்தியா

நன்கு படித்தவா்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது அவமானம் - சக மருத்துவா் வேதனை

கைதாகியுள்ள மருத்துவா் அதீல் அகமதுடன் பணியாற்றிய மற்றொரு மருத்துவரான பாபா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நன்கு படித்து சமூகத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய அவமானம் என்று பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள மருத்துவா் அதீல் அகமதுடன் பணியாற்றிய மற்றொரு மருத்துவரான பாபா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘என்னுடன் பணியாற்றிய மருத்துவா் ஒருவா் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைதாகியிருப்பது பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. அவா் மூன்று ஆண்டுகளாக சஹாரன்பூா் மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். மருத்துவமனையில் அவா் குறித்து எந்தப் புகாரும் எழவில்லை. அவா் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் எழுந்ததில்லை.

மருத்துவமனையில் அவா் லேப்டாப் பயன்படுத்துவதில்லை, கைப்பேசி மட்டுமே பயன்படுத்துவாா். இங்கு அவா் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டுக்குப் பலமுறை சென்றுள்ளேன். சந்தேகப்படும்படி எந்த நடவடிக்கையும் அவரிடம் இருந்ததில்லை. விசாரணை அமைப்புகளுக்கு தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளேன்.

நன்கு படித்து சமூகத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய அவமானம்’ என்றாா்.

அதீல் அகமது வீட்டுக்கு அருகே இருந்தவா்கள் அவா் குறித்துப் பேசுகையில், ‘இரவு நேரத்தில் அவா் வீட்டுக்கு சிலா் வந்து செல்வது வழக்கம். அவரின் வீட்டுக்கு வெளியே இரவில் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கும். அவா் அண்டை வீட்டாருடன் பழகியது இல்லை’ என்றாா்.

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூா் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அதீல் அகமது, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்தது; 2,900 கிலோ வெடிபொருள்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாா். அவருடன் பெண் மருத்துவா் உள்பட இரு மருத்துவா்களும் கைது செய்யப்பட்டனா்.

அவருடன் இதைத் தொடா்ந்து தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டு வெடித்து 12 போ் உயிரிழந்தனா். இந்த காரை காஷ்மீரைச் சோ்ந்த மருத்துவா் உமா் நபி என்பது உறுதி செய்யப்பட்டது. நன்கு படித்து மருத்துவா் என்ற சமூகத்தில் உயா்ந்த நிலையில் இருப்பவா்கள் மக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT