உத்தரப் பிரதேசத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து பிரதாப்கர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் தேவேந்திர திரிபாதி கூறுகையில்,
2023 ஜூன் 23 அன்றிரவு, ஏழு வயது சிறுமி சக சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குடிபோதையிலிருந்த மௌரியா சிறுமியை வீட்டிற்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்டவரின் தந்தை புகார் அளித்த நிலையில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் மௌரியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது வழக்குரைஞரின் வாதங்களைக் கேட்ட பிறகு, சாட்சியங்களின் அடிப்படையில் நீதிமன்றம் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதித்ததாக வழக்குரைஞர் கூறினார்.
அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவம் மற்றும் மன அதிர்ச்சிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: தில்லியில் கடுமையான காற்று மாசு: 5-ஆம் வகுப்பு வரை ஹைப்ரிட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.