உத்தரகண்டில் காங்கிரஸ் மாநிலத் தலைவராக கணேஷ் கோடியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் பதினைந்து மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தேர்தல் குழுவை அறிவித்துள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் பாஜக கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவும் வரவிருக்கும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஏற்கெனவே இதற்கான தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டார்.
இந்த முறை காங்கிரஸ் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே செயல்பட்ட தொடங்கியுள்ளது. மாநிலத் தலைவரை மாற்றுவது மட்டுமல்லாமல் தேர்தல் பிரசாரம் மற்றும் நிர்வாகக் குழுக்களையும் முன்கூட்டியே அமைத்துள்ளது.
பாஜகவின் முன்னெச்சரிக்கையான தயாரிப்புகளை உணர்ந்த காங்கிரஸ் உயர்நிலைக்குழு, உத்தரகண்ட்டின் முக்கிய சாதி சமன்பாடுகளான தாக்கூர், பிராமணர், எஸ் மற்றும் எஸ்டி ஆகியவற்றை சமன்படுத்த முயன்றுள்ளது. அதே நேரத்தில் மாநிலத் தலைமையை மறுசீரமைக்கிறது.
அதன்படி, பிராமணத் தலைவர் கணேஷ் கோடியால், கரண் மஹாராவுக்குப் பதிலாக மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தாக்கூர் தலைவர் ஹரக் சிங் ராவத் தேர்தல் மேலாண்மைக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். எஸ்டி தலைவர் பிரீதம் சிங் பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் எஸ்சி தலைவர் யஷ்பால் ஆர்யா எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்கிறார்.
2022 தேர்தலின்போது கட்சிக்குள் கோஷ்டி மோதலைக் கண்ட அனுபவத்திலிருந்து காங்கிரஸ் உயர்நிலைக் குழு, இந்த முறை முன்கூட்டியே மறுசீரமைப்பு செய்துள்ளது.
உத்தரகண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் 2022 பிப்ரவரியில் நடத்தியது. புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக மாநிலத்தில் 47 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் 19 இடங்களை வென்றது. பாஜக தலைமையிலான அரசு மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறது. இதற்கு முன்னதாக முதல்வராக 2017ல் திரிவேந்திர சிங் ராவத், 2021ல் முதல் புஷ்கர் சிங் தாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: தில்லி அருகே மீண்டும் வெடி சப்தம்; அலறிய மக்கள்! என்ன நடந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.