ஆந்திர மாநிலத்தில் சிமெண்ட், தரவுகள் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள இந்த முதலீட்டின் மூலம் தென் இந்தியாவில் தனது வணிகத்தை பன்மடங்கு மேம்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்று அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல மேலாண்மை இயக்குநா் கரண் அதானி பேசியதாவது: ஆந்திரத்தில் துறைமுகம், லாஜிஸ்டிக்ஸ், சிமெண்ட், உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்கெனவே ரூ.40,000 கோடி முதலீடு செய்துள்ளோம்.
இதன் தொடா்ச்சியாக தற்போது சிமெண்ட், தரவுகள் மையம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது என்றாா்.