காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு என தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு கூறியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(நவ. 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி 111 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
பெரும்பான்மைக்கு(122) அதிகமான தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
இந்நிலையில் பிகார் தேர்தல் முடிவுகள் குறித்துப் பதிவிட்டுள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு, பிரதமர் மோடி மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து,
"வெற்றி பெற என்ன தேவை என்பதை அவர்கள் காட்டிவிட்டார்கள்.
காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. ராகுல் காந்தி அரசியலைவிட்டு விலக மற்றுமொரு வாய்ப்பும் காரணமும் இது" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றுமொரு பதிவில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுவிட்டது. சில தலைவர்கள்(மோடி, நிதீஷ்) வெற்றி பெறுவதற்காகவே பிறந்துள்ளனர். மக்களுக்கு ஆற்றிய சேவை அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.