பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துப் பதிவில், ``பிகார் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அவர்களின் பொய்களையும் ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும் முயற்சிகளையும் பிகார் மக்கள் நிராகரித்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டுத் தலைமை, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு மீதான மக்களின் நம்பிக்கையை பிகார் தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்த வெற்றியைக் கொண்டுவந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு! - குஷ்பு பதிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.