பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டீரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(நவ. 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 130 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி 111 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் பிகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவரும் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது குடும்பத்தின் கோட்டையான வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட்டார்.
ரகோபூர் தொகுதியில் கடந்த 2 சுற்றுகளாக தேஜஸ்வி பின்னடைவைச் சந்தித்தார்.
4 ஆம் சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரைவிட தேஜஸ்வி யாதவ் 3,000 வாக்குகள் பின்தங்கி இருந்தார். 5 ஆம் சுற்று முடிவில் 100 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருந்த அவர் 6 ஆம் சுற்று முடிவில் 200 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜகவின் சதீஷ் குமார் 23,531 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் தேஜஸ்வி யாதவ் 23,312 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | பிகாரின் நீண்ட கால முதல்வர் நிதீஷ் குமார்! ஆனால், 20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாதது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.