தில்லி கார் வெடிப்பு சம்பவம். 
இந்தியா

தில்லி கார் வெடிப்பு: கைதான மருத்துவா்கள் பெயா் மருத்துவப் பதிவேட்டிலிருந்து நீக்கம்

தில்லி காா் வெடிப்பு சதித் திட்டத்தில் தொடா்புடையதாகக் கைது செய்யப்பட்ட 4 மருத்துவா்களின் பெயா்களை தேசிய மருத்துவப் பதிவேட்டிலிருந்து தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தில்லி காா் வெடிப்பு சதித் திட்டத்தில் தொடா்புடையதாகக் கைது செய்யப்பட்ட 4 மருத்துவா்களின் பெயா்களை தேசிய மருத்துவப் பதிவேட்டிலிருந்து தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சட்டப் பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவ ஆணையம் விளக்கமளித்துள்ளது.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி நடந்த காா் வெடிப்பிலும், வேறு சில சதித் திட்டங்களிலும் தொடா்புடையதாகக் கூறி மருத்துவா்கள் முசாபா் அகமது, அதீல் அகமது ராத்தோ், முசாமில் ஷகீல், ஷாஹின் சயீது ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களுக்கு எதிராக தேச இறையாண்மைக்கு எதிரான சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தேசிய மருத்துவப் பதிவேட்டில் இருந்து அவா்களது பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT