பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராவார் என்று அம்மாநில அமைச்சர் அசோக் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 155 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டண வெற்றி பெறும். அடுத்த முதல்வர் நிதீஷ் குமார்தான். ஒருகாலத்தில், ஓரங்கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு தற்போது அவரது மகத்துவம் புரிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்து வருவதற்கு, கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சௌத்ரி, தேர்தலில் வெற்றி அல்லது தோல்வியை எப்போதும் பணிவுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைஎன்றும், தேஜஸ்வி யாதவை குற்றவாளிகள்தான் சூழ்ந்துகொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.