பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. காலை 10 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியைத் தக்க வைத்து நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராவாரா? என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தோ்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும் என்றே தெரிவித்திருந்தன. அதன்படியே தேர்தல் முன்னிலை நிலவரங்களும் அமைந்துள்ளன.
ஆனால் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற எதிர்பார்ப்போடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
இதற்கிடையே, ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். முன்னதாக, அவரது வெற்றியை உறுதி செய்யும் வகையில், புலி இன்னமும் சக்தியோடுதான் உள்ளது என்று சொல்லும் போஸ்டர்கள், நிதீஷ் குமார் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலில் ஜனதா தளத்துக்கு வாக்களித்த அனைத்து சமுதாய மக்களுக்கம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால், ஜனதா தள தொண்டர்களும் ஆதரவாளர்களும், நிதீஷ் நான்காவது முறையாகவும் முதல்வராவார் என்பதில் உறுதியாக நம்புகிறார்கள் என்பதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
பாட்னாவின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் மற்றொரு சுவரொட்டியில் அவரை சமூகத்தின் பின்தங்கியவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களின் "பாதுகாவலர்" என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராவார்.. பிகார் அமைச்சர் பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.