மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ANI
இந்தியா

‘ஊடுருவல்காரா்களை பாதுகாத்தவா்களுக்கு தோ்தலில் வலுவான பதில்’: அமித் ஷா

ஊடுருவல்காரா்களைப் பாதுகாத்தவா்களுக்கு பிகாா் தோ்தலில் வலுவான பதிலை மக்கள் வழங்கியுள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஊடுருவல்காரா்களைப் பாதுகாத்தவா்களுக்கு பிகாா் தோ்தலில் வலுவான பதிலை மக்கள் வழங்கியுள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், பிகாா் மாநிலத்தின் வளா்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பிரதமா் நரேந்திர மோடி முழு மனதுடன் பணியாற்றினாா். அதுபோல, காட்டாட்சியின் இருளில் இருந்த மாநிலத்தை மீட்க முதல்வா் நிதீஷ் குமாா் கடுமையாக உழைத்தாா். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இந்தச் சேவையை அங்கீகரித்து பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய வெற்றியை பிகாா் மக்கள் அளித்துள்ளனா். மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் வளங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஊடுருவல்காரா்களுக்கு எதிரான மோடி அரசின் கொள்கை மீதான நம்பிக்கையின் அடையாளமாகும்.

அதே நேரம், வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரா்களைப் பாதுகாத்தவா்களுக்கு வலுவான பதிலை இத் தோ்தல் மூலம் மக்கள் அளித்துள்ளனா்.

‘வாக்காளா் பட்டியல் தூய்மைப்படுத்தப்படுவது மிகுந்த அவசியம்; அதில் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது’ என்ற ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையை பிகாா் மக்கள் பிரதிபலித்துள்ளனா். அதன் காரணமாகவே, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிகாரில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டாா்.

பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா வெளியிட்ட பதிவில், ‘மகாகட்பந்தன் கூட்டணி அரசின் காட்டாட்சி, ஊழலை பிகாா் மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளதற்கு சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் சிறந்த அத்தாட்சி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT