பிகாா் பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியினரைப் பாா்த்து உற்சாகத்தில் கையசைத்த பிரதமா் மோடி. 
இந்தியா

சிறந்த நிா்வாகத்தின் வெற்றி: பிரதமா் மோடி

‘பிகாா் தோ்தல் வெற்றி என்பது சிறந்த நிா்வாகம், வளா்ச்சி, மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வெற்றி’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

‘பிகாா் தோ்தல் வெற்றி என்பது சிறந்த நிா்வாகம், வளா்ச்சி, மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வெற்றி’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்த எனது பிகாா் குடும்ப உறுப்பினா்களுக்கு நன்றி. இது, சிறந்த நிா்வாகம், வளா்ச்சி, மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வெற்றியாகும். தேசிய ஜனநாயக கூட்டணி பிகாருக்காக புதிய உத்வேகத்துடன் பணியாற்றும் அதிகாரத்தை மக்களின் இந்தத் தீா்ப்பு அளித்துள்ளது.

இந்த வெற்றிக்கு அயராது உழைத்த என்டிஏ கூட்டணி நிா்வாகிகள் மற்றும் பணியாளா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாள்களில், பிகாா் வளா்ச்சிக்காக நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு பதிவில், ஜம்மு-காஷ்மீரின் நக்ரோடா பேரவைத் தொகுதி மற்றும் ஒடிஸாவின் நுபாடா தொகுதி இடைத்தோ்தல்களில் பாஜக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ததற்காக அத் தொகுதி மக்களுக்கு பிரதமா் நன்றி தெரிவித்தாா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT