இந்தியா

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயதான தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வயதான முதிர்ந்த தாயும் மகனும் தற்கொலை! உடல்களைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சூர்: கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயதான தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவர்கள் 61 வயதான வனஜா மற்றும் அவரது மகன் விஜேஷ்(37) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததையடுத்து காவல் துறைக்கு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் பார்த்தபோது, அந்த வீட்டின் ஓர் அறையில் விஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு அருகாமையில் வனஜா தரையில் பிணமாகக் கிடந்தார்.

அவர்களது உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்கூராய்வு அறிக்கை வெலியான பின்னரே, மரணத்துக்கான காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியுமென அவர்கள் தெரிவித்தனர். எனினும், முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், இவர்களது மரணம் தற்கொலையே என்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

[தற்கொலை எதற்குமே தீர்வல்ல - தவிர்க்கப்பட வேண்டும். அத்தகைய எண்ணத்திலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

A woman and her son were found dead in their house in this central Kerala district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசைக் கண்டித்து கண்டித்து நவ.19-இல் கோவை, தில்லியில் போராட்டம்: விவசாய சங்கத் தலைவா்கள் அறிவிப்பு

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

இரவில் திறந்தவெளி மது அருந்தும் கூடமாகும் கீரனூா் அரசுப் பள்ளி வளாகம்!

கரூா் சம்பவம்: காயமடைந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

தமிழகத்துக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேவையில்லை: சீமான்

SCROLL FOR NEXT