நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்களின் உதவியுடன் உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். இதற்கு பொறுப்பேற்பதில் இருந்து தப்பிக்க முடியாது.
பயங்கரவாத செயல்களுக்கு எதிராக காங்கிரஸ் இந்த நாட்டுடன் துணை நிற்கிறது. சமீபத்திய தில்லி தாக்குதலின் எதிரொலியாக, வெளிப்புற ஆதரவுடன் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.