ஸ்ரீநகர் குண்டுவெடிப்பு உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பொறிமுறையை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
இதுதொடர்பாக கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்புக்கு கார்கே இரங்கல் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் நௌகாமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டிவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர் என்பது வருத்தம் அளிக்கிறது.
தில்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமாக கார் குண்டிவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று சில நாள்களில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. அதன் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முடியாது.
வெளி சக்திகளின் ஆதரவைத் தொடர்ந்து பெறும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துவருவது குறித்து விவாதிக்க அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பயங்கரவாதத்தின் கொடூரத்திற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் துணை நிற்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.